×

வாகனங்களை நிறுத்துவதில் தகராறு பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிய மூவருக்கு தலா 7 ஆண்டு சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய மெக்கானிக் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகர் கிழக்கு குஜ்ஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (29). மெக்கானிக் தொழில் செய்யும் இவர், தனது கடைக்கு பழுது பார்க்க வரும் வாகனங்களை, கடை அருகே உள்ள சிவகுமார் வீட்டு முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம்.

இதனால், சிவக்குமாருக்கும், கார்த்திக்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2020 மார்ச் 15ம் தேதி சிவக்குமார் தனது வீட்டின் முன்பு நின்றிருந்த போது, கார்த்திக் தனது நண்பர்கள் பிரகாஷ் (31), ஹரி (32) ஆகியோருடன் சென்று தகராறு செய்து சிவக்குமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டி.பி.சத்திரம் போலீசார், கார்த்திக், பிரகாஷ், ஹரி ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 3 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post வாகனங்களை நிறுத்துவதில் தகராறு பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிய மூவருக்கு தலா 7 ஆண்டு சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Additional Sessions Court ,Chennai ,East Gujji Street, Annanagar, Chennai ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...